விளையாட்டு விழாவிற்கு மருத்துவ மாணவர்களிடம் பணம் வசூல்
விளையாட்டு விழாவிற்கு மருத்துவ மாணவர்களிடம் பணம் வசூல்
UPDATED : செப் 15, 2023 12:00 AM
ADDED : செப் 15, 2023 04:35 PM
தேனி:
தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் புதிதாக சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களின் பெற்றோர்களிடம் தலா ரூ.1000 வீதம் வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது.தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் நேற்று முன்தினம் புதிதாக மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு மூலம் சேர்ந்த 100 மாணவ, மாணவிகளுக்கான வரவேற்பு விழா நடந்தது. முதல்வர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார்.துறை தலைவர்கள் முன்னிலை வகித்தனர். 2ம் ஆண்டு மருத்துவ மாணவிகள் புதிய மாணவ, மாணவிகளை வரவேற்றனர். இந்நிலையில் இந்த வரவேற்பு விழாவிற்கு முன் புதிதாக வந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் டாக்டர் ஒருவர் தலைமையில் தலா ரூ.1000 வீதம் வசூலிக்கப்பட்டுள்ளது என புகார் எழுந்தது.இதுகுறித்து முதல்வர் திருநாவுக்கரசு கூறுகையில், விளையாட்டு விழா அடுத்த 2 நாட்களில் நடக்க உள்ளது. அதற்கான செலவினத்திற்கு வசூலிக்கப்பட்டுள்ளது. இத் தொகைக்காக ரசீது வழங்கப்பட்டுள்ளது, என்றார்.
