தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அகில இந்திய தொழில் தேர்வு: விண்ணப்பிக்க அழைப்பு

அகில இந்திய தொழில் தேர்வு: விண்ணப்பிக்க அழைப்பு

அகில இந்திய தொழில் தேர்வு: விண்ணப்பிக்க அழைப்பு


UPDATED : செப் 16, 2023 12:00 AM

ADDED : செப் 16, 2023 09:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 16, 2023 12:00 AM ADDED : செப் 16, 2023 09:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அவரது செய்திக் குறிப்பு:
அகில இந்திய தொழில் தேர்வு கைவினைஞர் பயிற்சி திட்டம் கீழ் தேசிய தொழில் பயிற்சி குழுமம் மூலம் நடக்கும் அகில இந்திய தொழில் தேர்வில் தனித்தேர்வர்களாக பங்கேற்க விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.விண்ணப்பதாரருக்கு வரும் 18ம் தேதி 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில்லை. தொழில் பழகுனர் சட்டம் செயல்படுத்தும் நிறுவனங்கள், தொழிற்சாலை சட்டப்படி செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் அரசு, உள்ளாட்சி மன்றத்தில் பதிந்த நிறுவனங்கள் ஏதாவது ஒன்றில் விண்ணப்பிக்கும் தொழில் பிரிவு தொடர்பான பணியில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதல் நிலை தேர்வுகள் கருத்தியல் பாடத்தில் வரும் அக்டோபர் 10ம் தேதி மற்றும் 11ம் தேதி செய்முறை தேர்வு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நடக்கிறது.கருத்தியல் தேர்வில் வெற்றி பெற்றோர் மட்டுமே செய்முறை தேர்வில் பங்கேற்க முடியும். இதில் தேர்ச்சி பெறுவோர் வரும் 2024ம் ஆண்டு ஜூலையில் நடைபெற உள்ள அகில இந்திய தொழில் தேர்வில் தனித்தேர்வராக பங்கேற்க அனுமதிக்கப்படுவர். தொழில் பிரிவிற்கு ஏற்ப அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெறுவோருக்கு தேசிய தொழில் சான்று வழங்கப்படும். தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவம், முழு விபரம் அடங்கிய விளக்க குறிப்பேடை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.இதற்கான தேர்வு கட்டணம் 200 ரூபாய் ஆகும். இதனை www. Karuvoolam.tn.gov.in என்ற இணையதளம் மூலமோ அல்லது தமிழக அரசு கருவூலம், ஸ்டேட் பாங்க் கருவூல கிளை வழியாகவோ இ-சலான் மூலம் செலுத்தலாம். விண்ணப்பத்தோடு இணையவழியாக தேர்வு கட்டணம் செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டு, கல்விச்சான்று நகல் மற்றும் இதர ஆவண நகல்களை இணைத்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 18ம் தேதிக்குள் அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us