தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சர்வதேச கடற்கரை தூய்மை தினம் கோவளத்தில் 300 பேர் பங்கேற்பு

சர்வதேச கடற்கரை தூய்மை தினம் கோவளத்தில் 300 பேர் பங்கேற்பு

சர்வதேச கடற்கரை தூய்மை தினம் கோவளத்தில் 300 பேர் பங்கேற்பு


UPDATED : செப் 17, 2023 12:00 AM

ADDED : செப் 17, 2023 09:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 17, 2023 12:00 AM ADDED : செப் 17, 2023 09:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்போரூர்:
சர்வதேச கடற்கரை துாய்மை தினத்தையொட்டி, கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம், எஸ்.ஆர்.எம்., பல்கலை, கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில், திருப்போரூர் அடுத்த கோவளம் கடற்கரையில் நேற்று காலை துாய்மை பணி நடந்தது.இதில், கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.அவர்களுடன், கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் சுதாகரன், உதவி ஆய்வாளர்கள் ரவிசங்கர், ராஜேந்திரன், ஊராட்சி தலைவர் சோபனா தங்கம் இணைந்து துாய்மை பணியில் ஈடுபட்டனர்.இதில், 500 கிலோ குப்பை சேகரிக்கப்பட்டது. மட்கும் குப்பை, மட்கா குப்பை என தரம் பிரிக்கப்பட்டு, மறுசுழற்சி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.குப்பையை அகற்றிய பின், கடற்கரைகளில் இனி குப்பை போட மாட்டோம் என, உறுதிமொழி ஏற்றனர்.தொடர்ந்து, கடல் வளத்தை பாதுகாக்கவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் கடற்கரைகளை சுத்தம் செய்யப்படுகிறது.ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களால் கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்து வருகின்றன. அவற்றை பாதுகாக்க கடற்கரை மற்றும் கடலை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.தாம்பரம்
அதேபோல், தாம்பரம் மாநகராட்சி, சுகாதாரத் துறை சார்பிலும் துாய்மை பணி நடந்தது.பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்த்து மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்து, மாணவ - மாணவியர், தாம்பரத்தில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். தவிர, மறுபயன் பாட்டு பொருட்கள் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us