UPDATED : செப் 18, 2023 12:00 AM
ADDED : செப் 18, 2023 08:37 AM
அ நிறம் | அளவு
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லுாரி தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் கண்ணதாசன் தலைமையிலான குழுவினர், நாதன்கோவில் ஜெகனாதப்பெருமாள் கோவிலில், கொடிமரத்தின் அடிப்பகுதியில் உள்ள நான்கு துண்டு கல்வெட்டுகளை ஆய்வு செய்தனர்.அந்த கல்வெட்டு சோழர்காலத்தைச் சார்ந்ததாகும். இவற்றின் எழுத்துக்கள் மிகவும் சிதைந்த நிலையில் காணப்பட்டன. அந்த கல்வெட்டுகளில் வைணவ பட்டர்கள் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன.இதன் மூலம் சோழர்கள் ஆட்சிக் காலத்தில், வைணவம் சிறப்புற்று இருந்தது தெரிய வருவதாக கல்வெட்டு ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
