தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்டெர்ன்ஷிப் பயிற்சி

பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்டெர்ன்ஷிப் பயிற்சி

பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்டெர்ன்ஷிப் பயிற்சி


UPDATED : செப் 18, 2023 12:00 AM

ADDED : செப் 18, 2023 10:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 18, 2023 12:00 AM ADDED : செப் 18, 2023 10:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2வில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பு திறன் என்ற பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பாடத்தின்படி, தொழில் நிறுவனங்களில் நேரடி களப்பயிற்சி வழங்கப்படும் என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, சி.இ.ஓ.,க்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதில், கூறியிருப்பதாவது:
பிளஸ் 1, பிளஸ் 2 தொழிற்கல்வி மாணவர்களுக்கு, தொழில் நிறுவனங்களில், 20 நாட்களில், 80 மணி நேரம் நேரடி களப்பயிற்சி அளிக்க வேண்டும். பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்க வேண்டும். மாணவர்களுக்கு உதவித்தொகை உண்டு. பிளஸ் 2 மாணவர்களுக்கு அக்.,3 முதல், 20 வரை; பிளஸ் 1 மாணவர்களுக்கு, நவ.,6 முதல், 23 வரை, களப்பயிற்சி வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us