தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/படிப்பை தொடர மாணவர்களுக்கு உதவி

படிப்பை தொடர மாணவர்களுக்கு உதவி

படிப்பை தொடர மாணவர்களுக்கு உதவி


UPDATED : ஜன 20, 2010 12:00 AM

ADDED : ஜன 20, 2010 05:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 20, 2010 12:00 AM ADDED : ஜன 20, 2010 05:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: பெற்றோரை இழந்து படிப்பை தொடர முடியாமல் தவிக்கும் 14 மாணவர்களுக்கு, ஜன. 23ல் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஏழு லட்சம் ரூபாய் மதிப்புள்ள திட்ட சான்றிதழ்களை வழங்குகிறார்.


சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கல்வி அறக்கட்டளை மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், புதிய வகுப்பறைகள், கலையரங்கம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஜன. 23 மாலை 4.00 மணிக்கு தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, புதிய கட்டடங்களை திறந்து வைக்கிறார்.


கல்வி உதவித் தொகை: விபத்துக்களில் பெற்றோரை இழந்து தொடர்ந்து படிக்க முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை சார்பில் தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இத்தொகை மாணவனின் வங்கிக் கணக்கில் 60 மாதங்களுக்கு நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தப்பட்டு, அதற்கான ஆவணம் மாணவனிடம் ஒப்படைக்கப்படும். இத்தொகையில் இருந்து கிடைக்கும் வட்டித் தொகையை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் படிப்பை தொடரலாம்.


கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு இத்திட்டத்தின்படி தேர்வு செய்யப்பட்டுள்ள 14 மாணவர்களுக்கு, ஏழு லட்சம் ரூபாய் மதிப்பிலான வங்கி ஆவணங்களை விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்குகிறார். தமிழக கால்நடைத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, மேல்நிலைக் கல்வி இணை இயக்குனர் கார்மேகம், கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி, திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us