UPDATED : ஜன 21, 2010 12:00 AM
ADDED : ஜன 21, 2010 12:49 PM
அ நிறம் | அளவு
சென்னை: ரஷ்ய மொழியை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் வீடியோ கான்பரன்சிங் முறையில் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு பயிற்றுவிக்க சென்னையில் உள்ள ரஷ்ய கலாசார மையம் ஏற்பாடு செய்து வருகிறது.
வேலை வாய்ப்புகள், திரைப்படத் தயாரிப்பு பரிவர்த்தனை என பலவற்றிற்கு ரஷ்ய மொழி உதவிகரமாக அமைந்துள்ளது. மொழி பெயர்ப்பாளர்களுக்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. சென்னையில் இயங்கி வரும் ரஷ்ய கலாசார மையத்தின் சார்பில், ரஷ்ய மொழி, தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் கற்றுத்தரப்பட உள்ளது.
