தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கலாமின் ‘புரா’ திட்டம் மாற்றியமைப்பு

கலாமின் ‘புரா’ திட்டம் மாற்றியமைப்பு

கலாமின் ‘புரா’ திட்டம் மாற்றியமைப்பு


UPDATED : ஜன 22, 2010 12:00 AM

ADDED : ஜன 22, 2010 10:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 22, 2010 12:00 AM ADDED : ஜன 22, 2010 10:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லியில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவுத் திட்டமான, நகர்ப்புற வசதிகளை கிராமங்களில் உருவாக்கும், ‘புரா’ திட்டம் 2004 முதல் 2005 வரை அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


மாற்றி அமைக்கப்பட்ட ‘புரா’ திட்டத்தை அமல்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஜன. 21ம் தேதி ஒப்புதல் அளித்தது. மாற்றி அமைக்கப்பட்ட, ‘புரா’ திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 248 கோடி ரூபாயாக இருக்கும். பொதுத்துறை மற்றும் தனியார் துறை பங்களிப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.


கல்வி ரீதியாக பின்தங்கிய 374 மாவட்டங்களில், மாதிரி கல்லூரிகள் அமைக்கவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது. இந்த திட்டம் அறிமுகமானால், ஒவ்வொரு ஆண்டும் 1.9 லட்சம் மாணவர்கள் கல்வி அறிவு பெறுவர். ஒவ்வொரு மாதிரி கல்லூரியும் 8 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இதில், மத்திய அரசின் பங்கு 2.67 கோடி ரூபாய். மீதமுள்ளவற்றை மாநில அரசுகள் வழங்கும். இவ்வாறு திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us