9ம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்களுக்கு ‘டார்ச்சர்’ ஆரம்பம்
9ம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்களுக்கு ‘டார்ச்சர்’ ஆரம்பம்
UPDATED : ஜன 22, 2010 12:00 AM
ADDED : ஜன 22, 2010 11:09 AM
விருதுநகர்: ஒரு சில தனியார், மெட் ரிக் பள்ளிகளில் பிளஸ் 1, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இந்த கல்வியாண்டில் இருந்தே, பொது தேர்வுக்கான பாடங்கள் நடத்த துவங்கிவிட்டனர்.
இந்த கல்வியாண்டில் பிளஸ் 1, ஒன்பதாம் வகுப்பு, படிக்கும் மாணவர்களுக்கு, இந்த கல்வி ஆண்டிற்குரிய அனைத்து பாடங்களையும் ஆசிரியர்கள், அரையாண்டுத் தேர்வுக்கு முன்பே நடத்தி முடித்து விட்டனர். அவர்களுக்கு அடுத்த கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பாடங்களை ஒரு சில பள்ளிகளில், இப்போதே கற்பிக்க துவங்கி விட்டனர்.
அடுத்த ஆண்டு அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கவும், பள்ளிகளின் நற்பெயரை தக்க வைக்கவும், இவ்வாறு முன்கூட்டியே பாடங்களை நடத்த துவங்கி விட்டனர். இதனால், அடுத்தாண்டுக்கான பாடப்புத்தகங்களை தேடி, மாணவர்கள் அலைந்து வருகின்றனர். ஒன்பதாம் வகுப்பு, பிளஸ் 1 பாடங்களை படித்து விட்டு தேர்வு எழுதாமலேயே பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பாடங்களை படிப்பதால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில், மாணவர்களுக்கு சனி, ஞாயிறு, அரையாண்டு விடுமுறை தினங்களில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புக் கள் நடத்தப்படுகிறது. பள்ளியின் தேர்ச்சி விகிதத்திற்காக, மாணவர்களுக்கு அடுத்தாண்டுக்கான பாடங்களை இந்த ஆண் டே கற்பித்து, விடுமுறை இன்றி ‘டார்ச்சர்’ செய்வதை தடுக்க, பள்ளி கல்வித்துறை முன்வர வேண்டும். இதற்கென மாவட்டம் தோறும் தனியாக குழுக்கள் அமைத்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மாணவர்களை ‘டார்ச்சர்’ செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும்.
