தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமூக அக்கறையுடன் மாணவர்கள் அமைத்த அறிவியல் கண்காட்சி

சமூக அக்கறையுடன் மாணவர்கள் அமைத்த அறிவியல் கண்காட்சி

சமூக அக்கறையுடன் மாணவர்கள் அமைத்த அறிவியல் கண்காட்சி


UPDATED : ஜன 22, 2010 12:00 AM

ADDED : ஜன 22, 2010 12:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 22, 2010 12:00 AM ADDED : ஜன 22, 2010 12:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சவுகார்பேட்டை ஜெயின் பள்ளியில் சமூக அக்கறையுடன் மாணவர்கள் அமைத்திருந்த அறிவியல் கண்காட்சி, பார்வையாளர்களை கவர்ந்தது.


சென்னை, சவுகார்பேட்டை தேராபந்த் ஜெயின் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில், இரண்டு நாள் அறிவியல் கண்காட்சி நேற்று துவங்கியது. வடசென்னை எம்.பி., இளங்கோவன், கண்காட்சியை துவக்கி வைத்து பேசுகையில், ‘இயற்கையின் செயல்பாடுகளுக்கான காரணத்தை கண்டறிவது தான் விஞ்ஞானம். ஏன், எப்படி என நமக்குள்ளே கேள்வி எழுப்பினால் பிரச்னைக்கான தெளிவு கிடைக்கும். அறிவியல் வளர்ச்சியால் சமூகத்திற்கு பல வளர்ச்சிகளைப் பெற முடிந்தது. மாணவர்கள் இப்போதே தங்களது அறிவியல் வளர்ச்சியை வளர்த்துக் கொள்வதன் மூலம் சமூகம் பயனடையும்’  என்றார்.


தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப உறுப்பினர் செயலர் வின்சென்ட் பேசுகையில், ‘அனைத்து பள்ளிகளிலும் அறிவியல் கண்காட்சி நடத்த முன்வரவேண்டும். இதனால், மாணவர்களின் விஞ்ஞான அறிவு வளர்ச்சி பெறும். பள்ளியில் படிக்கும் போதே புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.


கண்காட்சியில், இயற்பியல் மாணவர்கள் அமைத்த, ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டதும் தானியங்கி சிக்னல்களில் வழி ஏற்படுத்தி தரும் ‘ஆட்டோமெட்டிக் டிராபிக் கன்ட்ரோல்’, கம்ப்யூட்டர் பிரிவு மாணவர்கள் அமைத்த, நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்பட்டால் மருத்துவமனை, போலீஸ் நிலையங்களுக்கு உடனடியாக தகவல் சொல்லும் ‘ரோபோடிக்ஸ்’ ஆகியவை வெகுவாக கவர்ந்தது. சமூக அக்கறையுடன் அமைக்கப்பட்டதாக அனைவரும் பாராட்டினர்.


மேலும், சாயப்பட்டறை கழிவு நீர் சுத்திகரிப்பு, சர்க்கரை தயாரிக்கும் முறை என மாணவ, மாணவியர் பல்வேறு செயல் விளக்கங்களை கண்காட்சியில் அமைத்திருந்தனர். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை, பள்ளி செயலர் சகன்மல் தோகா, பள்ளி முதல்வர் பத்மினி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us