தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலங்கையில் கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை

இலங்கையில் கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை

இலங்கையில் கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை


UPDATED : அக் 08, 2023 12:00 AM

ADDED : அக் 08, 2023 05:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2023 12:00 AM ADDED : அக் 08, 2023 05:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கொழும்பு:
நம் அண்டை நாடான இலங்கையில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கனமழை கொட்டி வருகிறது.இதனால், கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. வீடுகள், விளைநிலங்களை மழை நீர் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.தலைநகர் கொழும்பில் நேற்று பஸ்சின் மீது மரம் முறிந்து விழுந்ததில், ஐந்து பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர்.கலே மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீட்டின் மீது பாறை விழுந்ததில், அங்கு தங்கியிருந்த நபர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.கனமழை மற்றும் நிலச்சரிவு தொடர்ந்ததை அடுத்து, மாவட்டம் முழுதும் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us