UPDATED : அக் 08, 2023 12:00 AM
ADDED : அக் 09, 2023 09:16 AM
அ நிறம் | அளவு
சென்னை:
கவர்னர் மாளிகை வளாகத்தை, சுற்றி பார்க்க விரும்பும் மாணவர்கள், இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.அரக்கோணம் ஹயக்ரீவர் வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள், கவர்னர் மாளிகையை சுற்றி பார்த்தனர். சுதந்திரப் போராட்ட வீரர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான, பள்ளி மாணவர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், கவர்னர் மாளிகையை சுற்றி பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.விருப்பம் உள்ள மாணவர்கள், tnrajbhavan.gov.in இணையதளம் வழியே, ஒரு வாரத்திற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என, கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.
