தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணாமலை பல்கலையில் நிதி சிக்கல்!

அண்ணாமலை பல்கலையில் நிதி சிக்கல்!

அண்ணாமலை பல்கலையில் நிதி சிக்கல்!


UPDATED : அக் 09, 2023 12:00 AM

ADDED : அக் 09, 2023 10:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2023 12:00 AM ADDED : அக் 09, 2023 10:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், நிதிச்சிக்கல் அதிகரிக்கும் என பல்கலைக்கழக அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மதியழன் தெரிவித்தார்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டமைப்பு தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் ரொனால்டு, அழகப்பன் காந்தி, குமரவேல், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.அப்போது கூட்டமைப்பு தலைவர் மதியழகன் கூறியதாவது:
பல்கலைக்கழக கட்டமைப்புக்கு ஏற்ப, மாணவர்களின் சேர்க்கை இல்லாமல், ஆண்டு தோறும் குறைந்து வருகிறது. இதனால் பல்கலையில் நிதிச் சிக்கல் மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர் சேர்க்கை குறைவு என்ற காரணம் கூறி, பல்வேறு படிப்புகளை மூடுவதை நிறுத்தி, மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒவ்வொரு துறைக்கும் ஆராய்ச்சி நிதியை பெறுவதற்கான இலக்கை நிர்ணயித்து, அதற்கான முயற்சி எடுக்க வேண்டும். பல்கலைக் கழகம் எந்த நோக்கத்திற்காக துவங்கப்பட்டதோ, அதை கவனத்தில் கொண்டு 1996 க்கு பிறகு தேவையான ஆசிரியர். ஊழியர் பணி இடங்களை வரையறை செய்ய வேண்டும்.10 முதல் 20 ஆண்டுகள் தொடர்ந்து ஒரே பணியில் இருப்பவர்களுக்கு தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை பதவி உயர்வு வழங்க வேண்டும். ஆசியாவிலேயே மிக பெரியதும், 1260 படுக்கை வசதி கொண்டதுமான அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை, பல்நோக்கு மருத்துவமனையாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் என்.எம்.ஆர்., மற்றும் தொகுப்பூதிய ஊழியர்கள் 2013ல் அரசு பல்கலைக்கழகத்தை ஏற்றுக் கொண்ட போது நடைபெற்ற பரிமாற்றத்தின் காரணமாக விடுபட்டுள்ளனர். அவர்களை உடனடியாக பணி வரன்முறை செய்ய வேண்டும். பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us