பள்ளி கல்லுாரிகளில் தேர்தல் விழிப்புணர்வு போட்டிகள்
பள்ளி கல்லுாரிகளில் தேர்தல் விழிப்புணர்வு போட்டிகள்
UPDATED : அக் 10, 2023 12:00 AM
ADDED : அக் 10, 2023 05:19 PM
தேனி:
தேனி தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளி, கல்லுாரிகளில் தேர்தல் விழிப்புணர்வு போட்டிகள் நடக்கிறது.பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப்பள்ளியில் ஓட்டளிபதின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் தேர்தல் விழிப்புணர்வு போட்டிகள் நடந்தது. இதில் 9முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்றனர்.தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், தேனி தாலுகாவில் என்.எஸ்., மெட்ரிக் பள்ளி, கொண்டுராஜா உயர்நிலைப்பள்ளி, தேனி கம்மவார் மெட்ரிக் பள்ளி, வீரபாண்டி, கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகள்.தப்புக்குண்டு அரசு கலைக் கல்லுாரி, சவுராஷ்டிரா கலைக் கல்லுாரி, கோட்டூர் அரசு கலை கல்லுாரி, தேனி கம்மவார் சங்க கலைக் கல்லுாரி, பொறியியல் கல்லுாரி, பாலிடெக்னிக் கல்லுாரியில் ஆகிய 6 கல்லுாரிகளில் தேர்தல் விழிப்புணர்வு போட்டிகள் நடக்கிறது.மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாகளிலும் இருந்து பள்ளி, கல்லுாரி அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் பட்டியல் தயார் செய்து மாவட்ட அளவில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது என்றனர்.
