தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘இரண்டு லட்சம் மாணவர்களுக்கு பாதிப்பு வரும்’

‘இரண்டு லட்சம் மாணவர்களுக்கு பாதிப்பு வரும்’

‘இரண்டு லட்சம் மாணவர்களுக்கு பாதிப்பு வரும்’


UPDATED : ஜன 23, 2010 12:00 AM

ADDED : ஜன 23, 2010 10:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 23, 2010 12:00 AM ADDED : ஜன 23, 2010 10:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘நிகர்நிலைப் பல்கலைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தால், இரண்டு லட்சம் மாணவர்களுக்கு கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும்’ என்று, நிகர்நிலை பல்கலைகளின் ஆசிரியர் கூட்டமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.


இது குறித்து, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், பேராசிரியர் பாலசுப்பிரமணியன்  கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு, 44 நிகர்நிலைப் பல்கலைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதனால், இரண்டு லட்சம் மாணவர்கள், 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர். எந்த பாதிப்பும் வராது என்று, மத்திய அமைச்சர் கூறுகிறார். ஆனால், மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். ஒரு சில கல்லூரிகளில் குறைகள் இருக்கலாம். குறைகளை சுட்டிக்காட்டி, கால அவகாசம் தாருங்கள்.


அதற்குள் அனைத்து குறைகளையும் நிவர்த்தி செய்து விடுகிறோம். அதன்பின், கல்லூரிகளில் மீண்டும் ஆய்வு செய்து, அங்கீகாரத்தை தொடர அனுமதிக்க வேண்டும். கப்பல் கட்டுமான படிப்பு, துறைமுகம் கட்டுமான படிப்பு போன்றவை, அரசு பல்கலைகளில் படிக்க வாய்ப்பில்லை. நிகர்நிலைப் பல்கலைகளில் படித்த அனைத்து மாணவர்களுக்கும், படிப்பு முடிவதற்குள் வேலை கிடைக்கும் அளவுக்கு உயர்கல்வி தரமாக இருக்கிறது.
நிகர்நிலைப் பல்கலைக் கழகம் தான், இந்தியாவில் முதன் முதலாக கடல்சார் பல்கலைக் கழகத்தை துவக்கியது. அதன் பின், மத்திய அரசு கடல்சார் பல்கலைக் கழகத்தை உருவாக்கியது.


பல்கலைக் கழக மானியக்குழு, கல்லூரிகளுக்கு வந்து பல சோதனைகளை நடத்தியது. கல்வி சம்பந்தப்பட்ட செயல்முறை கூடங்களை நேரடியாக ஆய்வு செய்தது. பேராசிரியர்களிடம், மாணவர்களிடம் அக்குழு கலந்து பேசிய பின் திருப்தியாக சென்றனர். மத்திய அரசின் கண்காணிப்பு குழு நேரடியாக ஆய்வு நடத்த வராமல், திடீரென நிகர்நிலைப் பல்கலைகளின் அங்கீகாரம் ரத்து செய்ய வேண்டுமென பரிந்துரை செய்துள்ளது.


தமிழகத்தில் மட்டும் தான் உயர்கல்வித் தரம், ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. நைஜீரியா உள்ளிட்ட பல வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், நிகர்நிலைப் பல்கலைகளில் படித்து வருகின்றனர். அரசு விதிமுறைகளை பின்பற்றி தான், நிகர்நிலைப் பல்கலைகள் நடக்கின்றன. மாணவர்களுக்கு வேலை கிடைக்கக் கூடிய பட்டப் படிப்புகளைத் தான், நிகர்நிலைப் பல்கலைகலைகள் நடத்தி வருகின்றன. ஆராய்ச்சியார்கள் மற்றும் கல்வித்தரம் வாய்ந்த அனுபவமிக்க ஆசிரியர்கள் தான், நிகர்நிலைப் பல்கலைகளில் பணிபுரிகின்றனர். அவர்களின் வாழ்க்கை இப்போது கேள்விக்குறியாக உள்ளது.


நிகர்நிலைப் பல்கலைகளுக்கு எந்த ஒரு வாய்ப்பும் தராமல், திடீரென சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது வேதனையாக உள்ளது. நிகர்நிலைப் பல்கலைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யப்படும் என அறிவித்திருப்பது, மாணவர் சமுதாயத்தை பெரிதும் பாதிக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us