தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/லோகோ வடிவமைப்பு போட்டி வானிலை மையம் அறிவிப்பு

லோகோ வடிவமைப்பு போட்டி வானிலை மையம் அறிவிப்பு

லோகோ வடிவமைப்பு போட்டி வானிலை மையம் அறிவிப்பு


UPDATED : அக் 11, 2023 12:00 AM

ADDED : அக் 11, 2023 05:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2023 12:00 AM ADDED : அக் 11, 2023 05:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
இந்திய வானிலை ஆய்வு மையத்தின், 150 ஆண்டு நிறைவையொட்டி, லோகோ வடிவமைப்பு போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்திய வானிலை ஆய்வு மையம், 1875ல் துவக்கப்பட்டது. வரும் 2024 - 25ல், 150வது ஆண்டை நிறைவு செய்கிறது. இந்த சாதனைகளை இந்திய வானிலை ஆய்வு மையம் கொண்டாட உள்ளது.இதற்காக, 150 ஆண்டு நிறைவு சேவைக்கான லோகோ வடிவமைப்பு போட்டி நடத்தப்படுகிறது. இதில், பொதுமக்கள் பங்கேற்று, தங்கள் கற்பனை திறனுடன் கூடிய, இந்திய வானிலை ஆய்வு மையத்துக்கான லோகோவை வடிவமைக்கலாம். முதல் பரிசாக, 15,000; இரண்டாவது பரிசு, 10,000; மூன்றாம் பரிசு 5,000 ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.பங்கேற்க உள்ளோர் வரும் 15ம் தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். போட்டிக்கான விதிகள், பங்கேற்கும் முறை குறித்த விபரங்களை, https://mausam.imd.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us