தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தஞ்சை வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர்: முதல்வர் அறிவிப்பு

தஞ்சை வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர்: முதல்வர் அறிவிப்பு

தஞ்சை வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர்: முதல்வர் அறிவிப்பு


UPDATED : அக் 11, 2023 12:00 AM

ADDED : அக் 11, 2023 05:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2023 12:00 AM ADDED : அக் 11, 2023 05:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தஞ்சாவூரில் உள்ள வேளாண்மை கல்லூரிக்கு மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் சூட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.சட்டசபையில் 110வது விதியின் கீழ் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு:
மறைந்த வேளாண்மை விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தமிழக அரசுக்கு பல ஆலோசனைகளை வழங்கி உள்ளார். அவர் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.தஞ்சாவூர் ஈச்சாங்கோட்டையில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் சூட்டப்படுகிறது. இனி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி என அழைக்கப்படும். வேளாண்மை பல்கலையில் மாணவர்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் விருது வழங்கப்படும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us