தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிக்கு கட்டடம் கட்ட கவர்னர் நிதி உதவி

பள்ளிக்கு கட்டடம் கட்ட கவர்னர் நிதி உதவி

பள்ளிக்கு கட்டடம் கட்ட கவர்னர் நிதி உதவி


UPDATED : அக் 11, 2023 12:00 AM

ADDED : அக் 11, 2023 08:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2023 12:00 AM ADDED : அக் 11, 2023 08:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் பழங்குடியினருக்காக செயல்படும், எஸ்.எப்.ஆர்.டி., என்ற தொண்டு நிறுவனம், பள்ளி கட்டடம் கட்ட கவர்னர் ரவி 50 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளார்.இது தொடர்பாக, தொண்டு நிறுவன செயலர் அர்ஜுனன், கவர்னருக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஜவ்வாது மலையில் பழங்குடியின மாணவர்களுக்கு, பள்ளி கட்டடம் கட்ட, 50 லட்சம் ரூபாய், எஸ்.எப்.ஆர்.டி., அறக்கட்டளைக்கு, கவர்னர் ரவி வழங்கி உள்ளதாக, கவர்னர் மாளிகையில் இருந்து தொலைபேசியில் தெரிவித்தனர்.இது மிகப்பெரிய உதவி. ஜவ்வாது மலை மக்களால் மறக்க முடியாத உதவி. ஜவ்வாது மலைக்கு வந்த முதல் கவர்னர் நீங்கள் தான். பழங்குடியின மாணவர்கள், பெற்றோர் மற்றும் எங்கள் சார்பில், நிதியுதவி அளித்ததற்கு நன்றி. இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us