UPDATED : அக் 13, 2023 12:00 AM
ADDED : அக் 13, 2023 10:21 AM
பெ.நா.பாளையம்:
நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் நடந்த கலைத்திறன் போட்டிகளில் நுாற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.தமிழக அரசு சார்பில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் பெரியநாயக்கன்பாளையம் வட்டார ஒருங்கிணைப்பாளர் ரேணுகா தலைமை வகித்து, போட்டிகளை துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் ரவி முருகன் வரவேற்றார்.பல்வேறு தப்புகளில் நடந்த போட்டிகளில் பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.இதில், வெற்றி பெறும் போட்டியாளர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர். போட்டிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் நித்யா, ராஜேஸ்வரி, திருமகள், இளங்கோ உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.
