தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நுழைவு தேர்வுக்கு இலவச பயிற்சி

நுழைவு தேர்வுக்கு இலவச பயிற்சி

நுழைவு தேர்வுக்கு இலவச பயிற்சி


UPDATED : அக் 13, 2023 12:00 AM

ADDED : அக் 13, 2023 10:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2023 12:00 AM ADDED : அக் 13, 2023 10:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, சட்டப்படிப்பு நுழைவு தேர்வுக்கான இலவச பயிற்சி நடக்கிறது.கலெக்டர் ஷ்ரவன்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் சட்டப்படிப்பு பயில, அகில இந்திய அளவில் நடைபெறும் பொது நுழைவு தேர்வுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது.பிளஸ் 2 முடித்த, 18 - 25 வயதுக்குட்பட்டவர்களும், நடப்பாண்டில் பிளஸ்-2 பயிலும் மாணவர்களும் பயிற்சிகு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.இத்தேர்வுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும், தேர்வு நேரடியாக நடைபெறும். நுழைவு தேர்வுக்கான பயிற்சி வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில், அடுத்த கட்ட தேர்வுகளான நேர்காணல், குழுவிவாதம், எழுத்துத்தேர்வு, ஆகியவற்றிற்கும் பயிற்சி வழங்கப்படும்.விருப்பமுள்ளவர்கள் பயிற்சி பெற www.tahdco.com இணையதளத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us