UPDATED : அக் 13, 2023 12:00 AM
ADDED : அக் 13, 2023 10:59 AM
ஈரோடு:
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கு நேற்று, இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.செப்., 22 முதல், 27 வரை மொபைல் செயலி வாயிலாக துவக்க பள்ளி மாணவ, மாணவியருக்கு, காலாண்டு தேர்வு நடந்தது. 28 முதல், அக்., 2ம் தேதி விடப்பட்டிருந்த விடுமுறை, ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சியால், அக்., 8ம் தேதி நீட்டிக்கப்பட்டது. விடுமுறை முடிந்து பள்ளி வகுப்புகள் துவங்கப்பட்டன.இறைவணக்க கூட்டம் முடிந்தவுடன், ஒவ்வொரு வகுப்பாசிரியர்களிடம், தலைமை ஆசிரியர்கள் புத்தகங்களை வழங்கினர். முதல் பாடவேளையில், குழந்தைகளுக்கு இரண்டாம் பருவ பாடப்புத்தகங்களை ஆசிரியர்கள் வழங்கினர். குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தனர்.மாவட்ட தொடக்கல்வி துறை அலுவலர்கள் கூறுகையில், துவக்க பள்ளிகளை பொறுத்த வரை அதிகமான மாணவ, மாணவியர் ஐந்தாம் வகுப்பில் படிக்கின்றனர். அவர்களுக்கு, தமிழ் வழி, 8,039; ஆங்கில வழி, 6,039 உட்பட, 14, 078 புத்தகங்கள் நேற்று வழங்கப்பட்டுள்ளது.பள்ளிக்கு வராத குழந்தைகளுக்கு பள்ளிக்கு வந்தவுடன் புத்தகங்களை வழங்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றனர்.
