UPDATED : அக் 15, 2023 12:00 AM
ADDED : அக் 15, 2023 05:43 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தத்தில் தமிழ்நாடு கிராம வங்கி மெட்டுக்குண்டு கிளை சார்பாக, சிறப்பு நிதி சார் கல்வி முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் அன்புராஜ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். கலைக்குழு மூலம் வங்கி சேவை, அரசு சமூக பாதுகாப்பு திட்டங்கள், பாதுகாப்பான முதலீடு ஆகியவை பற்றி நாடகங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வங்கி நிர்வாகத்தினர் செய்தனர்.
