UPDATED : அக் 16, 2023 12:00 AM
ADDED : அக் 16, 2023 09:43 AM
அருப்புக்கோட்டை:
கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட எமிஸ் என்ற அடையாள அட்டையில் பல குளறுபடிகள் உள்ளதால், சரி செய்ய முடியாமல் ஆசிரியர்கள் திணறுகின்றனர்.தமிழகத்தில் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகையை டிஜிட்டல் முறையில் செயலியில் பதிவு செய்ய &'எமிஸ்&' (கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு) என்ற முறை உள்ளது. இதற்கான அடையாள அட்டையும் வழங்கப்பட்டு, அதில் க்யூ.ஆர். கோடும் உள்ளது.இதில் பிறந்த தேதி, அலைபேசி எண்கள் உட்பட விபரங்கள் தவறுதலாக அச்சாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியை அணுகி பிழைகளை சரி செய்து தரும்படி கேட்டால், கல்வி துறையின் மூலமாக நீங்கள் திருத்தம் செய்து கொள்ளலாம் என்று கூறுகின்றனர். துறையை அணுகி கேட்டால் பள்ளியின் மூலமாக செய்து கொள்ளுங்கள் என, மாறி மாறி ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.இதனால் வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் குழந்தைகளை பார்ப்பதற்காகவும், சுற்றுலாவுக்காக விடுமுறை காலங்களில் வெளிநாடு செல்லும் ஆசிரியர்கள் பாஸ்போர்ட், விசா எடுப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.இது குறித்து விருதுநகர் மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கர் மாவட்ட தலைவர் சரவணசெல்வன், எமிஸ் அட்டையில் உள்ள திருத்தங்களை சரி செய்யாவிடில் இனி வரும் காலங்களில் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் நாளில் வேறு ஏதேனும் சிக்கல்களை ஏற்படுத்தி விடுமோ என அஞ்சுகின்றனர். அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து எமிஸ் அடையாள அட்டைகளில் உள்ள பிழைகளை சரி செய்து வழங்க வேண்டும், என்றார்.
