தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதல்வரை சந்தித்த இஸ்ரோ தலைவர்

முதல்வரை சந்தித்த இஸ்ரோ தலைவர்

முதல்வரை சந்தித்த இஸ்ரோ தலைவர்


UPDATED : அக் 16, 2023 12:00 AM

ADDED : அக் 16, 2023 05:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2023 12:00 AM ADDED : அக் 16, 2023 05:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
இஸ்ரோ திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தருகிறது என முதல்வரை சந்தித்த பின் இஸ்ரோ தலைவர் சோம்நாத் நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை இஸ்ரோ தலைவர் சோம்நாத் சந்தித்தார். பின்னர் சந்திப்பு குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 விண்கலம் திட்டங்களுக்கு பணியாற்றிய விஞ்ஞானிகளை முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார். விஞ்ஞானிகள் பாராட்டியதற்காக நன்றி கூறினேன்.இஸ்ரோ திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக முதல்வர் உறுதியளித்தார். இஸ்ரோவுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தருகிறது. குலசேகரப்பட்டினம் திட்டத்திற்கு தமிழக அரசு உதவியாக இருக்கிறது.சிறிய ராக்கெட்டுகளை குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஏவ முடியும். சந்திரயான்-3 திட்டத்தின் மாதிரியை முதல்வர் ஸ்டாலின் நினைவுப் பரிசாக அளித்தேன். சந்திரயான் திட்டங்களுக்கு பங்களித்த தமிழக விஞ்ஞானிகள் பாராட்டியதற்காக நன்றி கூறினேன். இவ்வாறு சோம்நாத் கூறினார்.சந்திப்பு
செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை நேரில் சந்தித்து ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் மாதிரியை பரிசாக சோம்நாத் பரிசாக வழங்கினார். இது குறித்து சோம்நாத் கூறுகையில், செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவர் உலகின் முதல் நிலை வீரராக வருவதற்கு நாம் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும்.பிரக்ஞானந்தா எங்களுடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இருப்பதில் நாங்கள் மேலும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். நாங்கள் நிலவில் சாதித்ததை இவர் பூமியில் சாதித்து உள்ளது பெருமையாக உள்ளது என்றார்.ஹாப்பியா தூங்கிட்டு இருக்கு
முன்னதாக சந்திரயான்-3 குறித்து, சோம்நாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
விக்ரம் லேண்டர் நிலவில் மகிழ்ச்சியாக உறங்கிக் கொண்டிருக்கிறது. அது தன்னுடைய பணியை சிறப்பாக செய்திருக்கிறது. அது நன்றாக உறங்கட்டும். அது விழிப்பதற்காக காத்திருப்போம் என்றார்.ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்த கேள்விக்கு சோம்நாத் அளித்த பதில்:
ஆதித்யா எல்-1 விண்கலம் தனது பயணத்தை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. சூரியனை ஆய்வு செய்து பல்வேறு தகவல்களை அனுப்பும். ஆதித்யா எல்-1 சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us