UPDATED : அக் 17, 2023 12:00 AM
ADDED : அக் 17, 2023 07:37 PM
அ நிறம் | அளவு
எச்.இ.சி.ஐ., எனும் இந்திய உயர்கல்வி ஆணையத்தை அமைப்பதற்கான மசோதா விரைவில் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும்; ஆனால், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிகள் அதன் வரம்பிற்குள் கொண்டு வரப்படாது என்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.ஒழுங்குமுறை, அங்கீகாரம் மற்றும் தொழில்முறை தரத்தை நிர்ணயித்தல் ஆகிய மூன்று முக்கிய பணியை அந்த ஆணையம் மேற்கொள்ளும். பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் நாக் எனும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் ஆகியவற்றை மறுசீரமைக்கும் வகையில் இந்த ஆணையம் அமையும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
