UPDATED : அக் 18, 2023 12:00 AM
ADDED : அக் 18, 2023 10:38 AM
அ நிறம் | அளவு
தேனி:
தேனி மாவட்ட சுற்றலாத்துறை சார்பில் தேனி, ஆண்டிப்பட்டி பெரியகுளம் பகுதிகளில் ஆதி திராவிடர் நலவிடுதி மாணவர்கள் 90 பேர், பிற்பட்டோர் நல விடுதி மாணவர்கள் 90 பேர் என 180 மாணவர்கள், 20 ஆசிரியர்கள் சுற்றுலா சென்றனர்.இதனை கலெக்டர் ஷஜீவனா துவக்கி வைத்தார். மாவட்ட சுற்றுலா அலுவலர் பாஸ்கரன், பிற்பட்டோர் நல அலுவலர் இந்துமதி, ஆதிதிராவிடர் நல அலுவலர் சசிகலா முன்னிலை வகித்தனர்.
