UPDATED : அக் 18, 2023 12:00 AM
ADDED : அக் 18, 2023 04:46 PM
அ நிறம் | அளவு
மதுரை:
மதுரை இலக்கிய மன்றம் மற்றும் அருணாசலா கல்வி அறக்கட்டளை சார்பில் நன்னெறி ஆசிரியர் விருது வழங்கும் விழா மங்கையர்கரசி கல்லுாரியில் நடந்தது. மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி கணினி பயன்பாட்டுத் துறை பேராசிரியை மஞ்சுளாவிற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஸ்ரீமதி, அரவிந்த் கண் மருத்துவமனை சி.எம்.ஓ., கிம் ராமசாமி ஆகியோர் விருது வழங்கினர்.இலக்கிய மன்றம் நிறுவனர் அவனிமாடசாமி வரவேற்றார். காப்பாளர் அருணாசலம் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் அசோக்குமார், தமிழ் தேசிய சான்றோர் அறக்கட்டளை தலைவர் ராஜதுரை, மன்றத் தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
