UPDATED : அக் 18, 2023 12:00 AM
ADDED : அக் 18, 2023 07:52 PM
மதுரை:
தமிழக அரசின் 2021ம் ஆண்டிற்கான அறிவியல் விஞ்ஞானி விருது பல்வேறு பல்கலை பேராசிரியர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அசோக்குமார் உட்பட 11 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில் பல்கலைகள், உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு அவர்களின் ஆராய்ச்சிகள், சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பு, சர்வதேச அளவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆய்வு கட்டுரைகள் உள்ளிட்ட அடிப்படையில் ஆண்டுதோறும் தமிழ்நாடு சயின்டிஸ்ட் அவார்டு வழங்கப்படுகிறது.2021ம் ஆண்டிற்கான விருதுக்கு தேர்வு பெற்றோர் விவரத்தை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் நேற்று வெளியிட்டுள்ளது.தேர்வு பெற்ற பேராசிரியர்கள் விவரம்:
மதுரை காமராஜ் பல்கலை ஜெனிட்டிக் இன்ஜி., துறை இணை பேராசிரியர் அசோக்குமார், மேட்டுப்பாளையம் தமிழ்நாடு வேளாண் பல்கலை வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன டீன் பார்த்திபன், கோவை பாரதியார் பல்கலை பயோ டெக்., பேராசிரியர் சதீஷ்குமார், சென்னை பல்கலை வேதியியல் துறை தலைவர் பாண்டியன், சென்னை அண்ணா பல்கலை சுற்றுச்சூழல் கல்வி மைய பேராசிரியர் பழநிவேலு, திருச்சி என்.ஐ.டி., கெமிக்கல் இன்ஜி., பேராசிரியர் அர்த்தநாரீஸ்வரன், சென்னை அண்ணா பல்கலை கணிதத்துறை தலைவர் அறிவுடைநம்பி, காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தவர் ரவி, கோவை ஐ.சி.ஏ.ஆர்., கரும்பு வளர்ப்பு ஆய்வு மைய முதல்வர் புதிரபிரதாப், தேனி கால்நடை பல்கலை மற்றும் ஆராய்ச்சி மைய (அனிமல் ஜெனிட்டிக்ஸ்) பேராசிரியர் ராஜேந்திரன், சேலம் கால்நடை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மைய டீன் இளங்கோ ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர்.இவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கவுள்ளார்.
