தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளி மாணவர்களுடன் சாப்பிட்ட தலைமை செயலர்

அரசு பள்ளி மாணவர்களுடன் சாப்பிட்ட தலைமை செயலர்

அரசு பள்ளி மாணவர்களுடன் சாப்பிட்ட தலைமை செயலர்


UPDATED : அக் 19, 2023 12:00 AM

ADDED : அக் 19, 2023 10:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2023 12:00 AM ADDED : அக் 19, 2023 10:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மறைமலை நகர்:
மறைமலை நகர் நகராட்சி, திருவள்ளுவர் சாலையில் உள்ள அரசினர் துவக்கப்பள்ளியில், நேற்று காலை தமிழக அரசின் முதன்மை செயலர் சிவ்தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார்.அவர், நேற்று காலை 8:15 மணிக்கு பள்ளிக்கு வருகை தந்து, பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் காலை உணவு தயாரிக்கப்படும் சமையல் கூடத்தில் சோதனை மேற்கொண்டார். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். பள்ளி குழந்தைகளிடம் உணவின் தரம், சுவை குறித்து கேட்டறிந்தார்.தலைமை ஆசிரியர் பார்த்திபனிடம், பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் மற்றும் மறைமலை நகர் நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us