UPDATED : அக் 19, 2023 12:00 AM
ADDED : அக் 19, 2023 10:21 AM
அ நிறம் | அளவு
கிள்ளை:
கிள்ளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு, உணவு திருவிழா நடந்தது.ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பச்சை பயறு சுண்டல், பாசிப்பருப்பு லட்டு, புட்டு வகைகள், கலவை சாத வகைகள், ஜவ்வரசி பாயாசம், பச்சை பயறு பாயாசம், பஞ்சாமிர்தம், பணியாரம் உள்ளிட்டவைகளை, தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்து காட்சிப்படுத்தினர். அந்த உணவுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் அம்ரீனா, கவுன்சிலர் யாஸ்மின் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் ரவி பிள்ளை, ஆசிரியர்கள் பர்வீன் பானு, விஜயலட்சுமி, சுதாராணி, ராஜேஸ்வரி, லெட்சுமி பாரதி செய்திருந்தனர்.
