தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வித்துறையில் மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் தவிப்பு

கல்வித்துறையில் மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் தவிப்பு

கல்வித்துறையில் மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் தவிப்பு


UPDATED : அக் 20, 2023 12:00 AM

ADDED : அக் 20, 2023 10:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2023 12:00 AM ADDED : அக் 20, 2023 10:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்:
கல்வித்துறையில் அலகு விட்டு அலகு பணியிட மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்கள், நீண்டநாட்களாக விடுவிக்கப்படாததால் தவிப்பில் உள்ளனர்.தமிழக கல்வித்துறையில் ஆண்டுதோறும், அனைத்துநிலை ஆசிரியர்களுக்கும், ஆன்லைன் மூலம் பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, மாறுதல் வழங்கப்பட்டு வருகிறது.இதுமட்டுமின்றி, கல்வித்துறையில் உள்ளவர்கள், அதனை சார்ந்த பிற துறைக்கு உள் மாறுதல் கலந்தாய்வும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில், தொடக்கக்கல்வித்துறையில் இருந்து, பள்ளிக்கல்வித்துறைக்கு, அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வும் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு, விருப்ப மாறுதல் அடிப்படையில், மாறுதல் வழங்கப்பட்டு வருகிறது.இந்தாண்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி தொடங்கி இரு தினங்கள் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த கலந்தாய்வில், சுமார் 350 ஆசிரியர்கள் வரை கலந்துகொண்டு பணி மாறுதல் ஆணை பெற்றுள்ளனர். ஆனால், தற்போது வரை, அவர்கள் மாறுதல் செய்யாமல் தவிப்பில் உள்ளனர்.இது குறித்து, ஆசிரியர்கள் கூறுயதாவது: ஆண்டுதோறும் அலகுவிட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு, மே மாதங்களில் நடப்பது வழக்கம். ஆனால், கடந்த 2019ம் ஆண்டுக்குப் பிறகு இந்த கலந்தாய்வு நடக்காமல் இருந்தது. இந்தாண்டு, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கலந்தாய்வு நடந்தது. ஆன்லைன் மூலம் கடந்த 17, 18ம் தேதி நடந்தது.தொடக்க கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள், பள்ளி கல்வித்துறைக்கு மாறுதலாகி செல்வதற்கு விண்ணப்பித்து, 350க்கும் மேற்பட்டோர், ஆன்லைன் கலந்தாய்வில் கலந்துகொண்டனர்.விழுப்புரம் மாவட்டத்தில் 15 பேரும், கடலுார் , கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் முறையே 15, 20 பேர் கலந்துகொண்டனர். இரு துறைகளிலும் தடையின்மை சான்று பெற்றே ஆசிரியர்கள் விண்ணப்பித்து கலந்தாய்வில் பங்கேற்றனர். சீனியாரிட்டி அடிப்படையில் கலந்தாய்வு முடிந்து, பணி ஆணை வழங்கியும், பணியிடம் மாற்றம் செய்யாமல் உள்ளனர்.தொடக்கக்கல்வி துறையிலிருந்து, பணி மாறுதல் பெற்றவர்களை, பள்ளிக்கல்வித்துறைக்கு விடுவிக்கப்படாததால், புதிய பணியிடத்தில் சேர இயலாமல் காத்துக்கொண்டிருக்கின்றனர்.இது சம்பந்தமான எந்தவித பதிலும், நடவடிக்கையும் இல்லாமல் ஆசிரியர்கள் தவித்துள்ளனர். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், அரசும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றனர்.இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. பணி மாறுதலை செயல்படுத்த, அரசிடமிருந்து அனுமதி கிடைக்காததால், கிடப்பில் உள்ளதாக தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us