UPDATED : அக் 20, 2023 12:00 AM
ADDED : அக் 20, 2023 11:02 AM
புதுச்சேரி:
தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து பாரதிதாசன் கல்லுாரி மாணவிகள் கவர்னர் தமிழிசையிடம் மனு அளித்தனர்.மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் படி, புதுச்சேரி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இளங்கலைப் பாடங்களுக்கான அட்டவணையில் தமிழ் மொழிப் பாடத்திற்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டு உள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் கவர்னர் தமிழிசையை சந்தித்து மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட கவர்னர் மாணவிகளின் கருத்தைப் பரிசீலிப்பதாக தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கையில் உள்ள சிறப்புகளை எடுத்துக் கூறி, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணிக்காமல் போராட்டங்களை கைவிட்டு தொடர்ந்து வகுப்புகளுக்குச் செல்லுமாறு கவர்னர் தமிழிசை அறிவுறுத்தினார்.
