UPDATED : அக் 20, 2023 12:00 AM
ADDED : அக் 20, 2023 05:09 PM
சிவகங்கை:
சிவகங்கையில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வு தொகை கிடைக்காதோர் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
மாவட்டத்தில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தில் 1997 முதல் 2001 வரை பதிவு செய்து, 18 வயது முடிந்தும், முதிர்வு தொகை கிடைக்காமல் உள்ளவர்களுக்கு முதிர்வு தொகை வழங்குவதற்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
இதற்காக டெபாசிட் பத்திரம் அசல், 10 ம் வகுப்பு மதிப்பெண் சான்று, வங்கி கணக்கு புத்தகம், பயனாளியின் போட்டோ ஆகியவற்றுடன் அந்தந்த ஒன்றிய அலுவலகத்தில் உள்ள பி.டி.ஓ.,அலுவலகத்தில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலரிடம் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, அக்., 25 க்குள் ஒப்படைக்க வேண்டும், என்றார்.
