தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டி

தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டி

தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டி


UPDATED : அக் 20, 2023 12:00 AM

ADDED : அக் 20, 2023 09:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2023 12:00 AM ADDED : அக் 20, 2023 09:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்:
புதுச்சேரி தினமலர் - பட்டம் இதழ், ஆச்சார்யா கல்விக் குழுமம் இணைந்து நடத்திய, மெகா வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.புதுச்சேரி தினமலர் - பட்டம் இதழ், ஆச்சார்யா கல்விக் குழுமம் இணைந்து, பதில் சொல்; அமெரிக்கா செல் என்ற மெகா வினாடி வினா போட்டி பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம், நாகர் பப்ளிக் சி.பி.எஸ்.இ., மேல்நிலை பள்ளியில் நேற்று நடந்த போட்டியில் 300 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த மாணவர்கள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு, மூன்று சுற்றுகளாக வினாடி வினா போட்டி நடந்தது.நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். முதல்வர் துரை இன்பராஜ் முன்னிலை வகித்தார். போட்டியின் இறுதியில், 10ம் வகுப்பு மாணவர்கள் கோகுலநாதன், வேங்கடபதி வேலாயுதம் அணி முதலிடம், 9ம் வகுப்பு மாணவர்கள் அரசகுமரன், அரவிந்தன் அணி இரண்டாம் இடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.ஜான் டூயி மெட்ரிக் பள்ளி
விழுப்புரம், ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நேற்று நடந்த போட்டியில் 200 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு, பள்ளி நிர்வாக அலுவலர் எமர்சன் ராபின் தலைமை தாங்கினார். முதன்மை ஒருங்கிணைப்பாளர் சுகன்யா ராபின் முன்னிலை வகித்தார்.போட்டியின் இறுதியில், பிளஸ் 1 மாணவிகள் தரணி, பிரமிளா அணி முதலிடம், மாணவர்கள் லோகேஷ்வரன், சாரதி விக்னேஷ் அணி இரண்டாம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியை சுதா டோம்னிக் உட்பட ஆசிரியைகள் பங்கேற்றனர்.ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி
விழுப்புரம் ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மணிவிழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் 300 மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி தாளாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். செயலாளர் ஜனார்தனன், பள்ளி முதல்வர்கள் சுமதி, மகாலட்சுமி முன்னிலை வகித்தனர்.போட்டியில், இறுதியாக 9ம் வகுப்பு மாணவர்கள் ஸ்வேகரன், சண்முகப்பிரியன் குழுவினர் முதலிடமும், பிளஸ் 1 மாணவர்கள் ஜனார்த்தனன், அருண்ராஜா ஆகியோர் இரண்டாம் இடமும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி செயலாளர் ஜனார்தனன் சான்றிதழ், கேடயம், பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.சரஸ்வதி எக்ஸல் பள்ளி
விழுப்புரம், சோழகனூர் சரஸ்வதி எக்ஸல் மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டியில், 300 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பள்ளி தாளாளர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். பொருளாளர் சிதம்பரநாதன், அலுவலக நிர்வாகிகள் முத்துசிவஞானம், அன்பரசன், முதல்வர் இந்துமதி முன்னிலை வகித்தனர்.போட்டியில் பத்தாம் வகுப்பு மாணவிகள் பவித்ரா, பத்மஜா ஆகியோர் கொண்ட குழு முதலிடம் பெற்றனர். பிளஸ் 1 மாணவி குணஸ்ரீ, 8ம் வகுப்பு மாணவி தர்ஷினி ஆகியோர் இரண்டாம் இடமும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி தாளாளர் ராஜசேகரன் சான்றிதழ், கேடயம், பதக்கம் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us