தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும்: கலெக்டர்

மாணவர்கள் படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும்: கலெக்டர்

மாணவர்கள் படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும்: கலெக்டர்


UPDATED : அக் 22, 2023 12:00 AM

ADDED : அக் 22, 2023 10:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2023 12:00 AM ADDED : அக் 22, 2023 10:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:
நாமக்கல் அடுத்த கீரம்பூர் அரசு மாதிரி பள்ளியில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வணிகவியல் பிரிவு மாணவர் சேர்க்கை அறிமுக விழா நடந்தது.கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது:
தமிழக முதல்வர், பள்ளிக்கல்வி துறைக்கு முக்கியத்துவம் வழங்கி, காலை உணவு திட்டம், நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், ஆர்வமும், திறமையும் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வி கனவுகளை நனவாக்க, அனைத்து மாவட்டங்களிலும், தலா, ஒரு மாதிரி பள்ளி உருவாக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.அதன்படி, நாமக்கல் மாவட்ட அரசு மாதிரி பள்ளி, கீரம்பூரில் துவங்கப்பட்டுள்ளது. சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில், தொழில்முறை கல்வி பிரிவுகளில் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கலை மற்றும் மருத்துவம் சேர்ந்து பயிலும் வாய்ப்பை உறுதி செய்யும் வகையில், மாதிரி பள்ளிகளில் நுழைவுத்தேர்வு அடிப்படையில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.மாணவர்கள், முழு ஈடுபாட்டுடன் தங்களது துறையில் கவனம் செலுத்தி, நன்றாக பயின்று நல்ல நிலைக்கு வர வேண்டும். பெற்றோர் தங்களின் குழந்தைகளை எங்களிடம் நம்பி ஒப்படையுங்கள். அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த கல்வியாளராக உருவாக்கிட சிறந்த ஆசிரியர்கள் மூலம் கற்பிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.கொங்கு மெட்ரிக் பள்ளி தலைவர் வெங்கடாசலம், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us