நீட் தேர்வு ரத்து தோல்வியை மறைக்கவே கையெழுத்து இயக்கம்
நீட் தேர்வு ரத்து தோல்வியை மறைக்கவே கையெழுத்து இயக்கம்
UPDATED : அக் 23, 2023 12:00 AM
ADDED : அக் 23, 2023 07:57 AM
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடி ஒன்றியத்தில் பேய்குளம், உன்னிபட்டி, ஆவல்சூரன்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி கே.வெள்ளாகுளம், வடக்கம்பட்டி பகுதிகளில் அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடந்தது.அவர் பேசியதாவது:
நீட் தேர்வு என்பதை ஒரே கையெழுத்தில் ரத்து செய்து விடுவோம் என அமைச்சர் உதயநிதி கூறினார். அந்த ரகசியத்தை பாக்கெட்டில் வைத்துள்ளோம் எனவும் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்தபின்பு ஒரே கையெழுத்து அல்ல, ஒரு கோடி கையெழுத்து வேண்டும் என பேச்சை மாற்றி மாற்றி பேசுகின்றனர். நேற்று கையெழுத்து இயக்கம் துவக்கி உள்ளனர். யாரை ஏமாற்றுவதற்காக இந்த இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.நாங்கள் சொன்னதை செய்வோம்; சொல்லாததையும் செய்வோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் கொடுத்த 520 வாக்குறுதிகளில் எதையும் முழுமையாக நிறைவேற்றவில்லை. ஆனால் சொல்லாத மின்சார கட்டணம், பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, குப்பை வரி உயர்வு போன்றவற்றை செய்துள்ளார். காவிரியில் தண்ணீர் இல்லை. பார்லிமென்டில் இது குறித்து பேசுவதற்கு 38 தி.மு.க., உறுப்பினர்களும் வாய் திறக்க மறுக்கின்றனர்.நீட் தேர்வு ரத்து குறித்தும் பார்லிமென்டில் தி.மு.க., உறுப்பினர்கள் பேச மறுக்கிறார்கள். தி.மு.க., அரசு தோல்வி அடைந்து விட்டது. அதை திசை திருப்புவதற்காக கையெழுத்து இயக்கத்தை நடத்துகிறார்கள், என்றார்.
