புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய சென்னை ஐ.ஐ.டி.,யில் சிறப்பு மையம்
புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய சென்னை ஐ.ஐ.டி.,யில் சிறப்பு மையம்
UPDATED : அக் 23, 2023 12:00 AM
ADDED : அக் 23, 2023 08:02 AM
கணைய புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கு தேவையான உயிரியல் குறிப்புகளை உருவாக்க தேவையான சிறப்பு ஆராய்ச்சி மையத்தை சென்னை ஐ.ஐ.டி., நிறுவி உள்ளது.உலக அளவில் புற்று நோயால் ஏற்படும் உயிரிழப்புகளில் கணைய புற்றுநோய் நான்காவது இடத்தில் உள்ளது. இது இன்னும் 10 ஆண்டுகளில் இரண்டாவது இடத்துக்கு உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.மரபணு தரவுகள்
புற்றுநோய் பாதிப்பு விகிதம் அதிகமாக இருப்பதால், பெரும்பாலான மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் குறிப்பிட்ட சிகிச்சை முறைகளுக்கான உயிரியக்க குறிப்புகளை நிறுவ இந்திய- நோயாளிகளின் புற்றுநோய் மரபணு தரவுகளை சேகரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளன.தற்போது சந்தையில் இருக்கும் புற்றுநோய் மரபணு தரவுகள் அனைத்தும் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த நோயாளிகளை அடிப்படையாக கொண்டது. அந்நாடுகளுடன் ஒப்பிடு கையில், நம் நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைப்பது மிகவும் அரிதாகவே உள்ளது.சிகிச்சை முறை
எனவே, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்திய நோயாளிகளின் மரபணு தரவுகளை சேகரித்து, அதன் வாயிலாக உயிரியல் குறிப்புகளை உருவாக்கும் சிறப்பு மையத்தை, சென்னை ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் உயிரிதொழில்நுட்பத் துறை நிறுவி உள்ளது.இதில் செய்யப்படும் ஆராய்ச்சிகள் வாயிலாக, கணைய புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியவதுடன், அதற்கான சிகிச்சை முறைகள், மருந்துகள் ஏற்படுத்தும் விளைவுகளையும் கண்டறிய முடியும்.
