தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர் பாதுகாப்பில் அலட்சியம் பள்ளி உரிமம் அதிரடி ரத்து

மாணவர் பாதுகாப்பில் அலட்சியம் பள்ளி உரிமம் அதிரடி ரத்து

மாணவர் பாதுகாப்பில் அலட்சியம் பள்ளி உரிமம் அதிரடி ரத்து


UPDATED : அக் 23, 2023 12:00 AM

ADDED : அக் 23, 2023 08:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2023 12:00 AM ADDED : அக் 23, 2023 08:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாவணகெரே:
மாணவர்களின் பாதுகாப்பை அலட்சியப்படுத்திய தனியார் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்து, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தாவணகெரே நகரின் சவனுார் பிளாசா அருகில் விஷன் இன்டர்நேஷனல் பள்ளி உள்ளது. பள்ளியில் மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. உயர் அழுத்த மின்சார கம்பியின் கீழே அமர்ந்து, அபாயத்துடன் பாடம் கற்கும் சூழ்நிலை இருந்தது.தாவணகெரே மாநகராட்சி தடை செய்யப்பட்ட மண்டலமாக அடையாளம் கண்ட இடத்தில், பள்ளி கட்டப்பட்டிருந்தது. ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை, 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்றனர்.கட்டடத்தின் மீது, 220 கே.வி., உயர் அழுத்த மின் கம்பி செல்கிறது. இதுகுறித்து, ஊடகங்களில் சிறப்பு செய்தி வெளியானது. இதைத் தீவிரமாக கருதிய, மாவட்ட கல்வித்துறை அதிகாரி கொட்ரேஷ் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். விசாரணையில் பள்ளியின் அலட்சியம் உறுதியானது.எனவே விஷன் இண்டர்நேஷனல் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்து, கொட்ரேஷ் உத்தரவிட்டுள்ளார். இங்கு படித்த மாணவர்களின் பெற்றோருடன் பேசி, வேறு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க கல்வித்துறை தயாராகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us