தேர்தல் பணி எதிரொலி: பொதுத்தேர்வு விடைத்தாள் வருகை
தேர்தல் பணி எதிரொலி: பொதுத்தேர்வு விடைத்தாள் வருகை
UPDATED : அக் 24, 2023 12:00 AM
ADDED : அக் 24, 2023 05:34 PM
ஈரோடு:
லோக்சபா தேர்தல் எதிரொலியாக, பொதுத்தேர்வு விடைத்தாள் ஈரோடு வந்தது.அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் வரும் நாட்களில் தீவிரமாக நடைபெற உள்ளது. தேர்தல் தொடர்பான விபரங்களை அச்சிட, அரசு அச்சகங்கள் தயார் நிலையில் இருக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளன.இதுபற்றி அரசு தேர்வுகள் துறையினர் கூறியதாவது:
10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு காலி விடைத்தாள்கள் (பிளாங்க் ஷீட்) 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தாள்கள் அச்சிடப்பட்டு வந்த வண்ணம் உள்ளது. இவை ஈரோடு, கோபி உள்ளிட்ட மூன்று இடங்களில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்படுகிறது. லோக்சபா தேர்தலுக்கான அச்சு பணிக்காக சற்று முன்கூட்டியே, இந்தாண்டு பொதுத்தேர்வு காலி விடைத்தாள் வந்துள்ளது. இவை சரிபார்க்கப்பட்டு வருகிறது. தேர்வுக்கு முன்னதாக மெயின் ஷீட் மட்டும் அரசு அச்சகங்களில் அச்சிடப்பட்டு வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
