தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மைசூரில் மஹாராணி கல்லுாரி, விடுதி பணிகளை பார்வையிட்ட முதல்வர்

மைசூரில் மஹாராணி கல்லுாரி, விடுதி பணிகளை பார்வையிட்ட முதல்வர்

மைசூரில் மஹாராணி கல்லுாரி, விடுதி பணிகளை பார்வையிட்ட முதல்வர்


UPDATED : அக் 24, 2023 12:00 AM

ADDED : அக் 24, 2023 08:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2023 12:00 AM ADDED : அக் 24, 2023 08:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மைசூரு:
மைசூரில் புதிதாக மஹாராணி கல்லுாரி, விடுதி கட்ட, 150 கோடி ரூபாயில் பணிகள் நடந்து வருகிறது, என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.மைசூரு மஹாராணி கல்லுாரி 100 ஆண்டுகள் பழமையானது. கடந்தாண்டு இக்கல்லுாரியின் ஆய்வக கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.மைசூருக்கு நேற்று வந்த முதல்வர் சித்தராமையா, மஹாராணி கல்லுாரிக்கு வந்தார். அங்கு நடந்து வரும் கட்டட பணிகளை பார்வையிட்டார். அதை தொடர்ந்து விடுதிக்கு சென்ற அவர், மாணவியரிடம் பேசினார்.பின், அவர் அளித்த பேட்டி:
முந்தைய அரசு, மைசூருக்கு எந்த வளர்ச்சி பணிகளையும் செய்யவில்லை. அறிவியல் கல்லுாரி, கலைக்கல்லுாரி மற்றும் விடுதிகள் என 150 கோடி ரூபாய் செலவில் கட்டடம் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. நான்கு கட்டடங்கள் கொண்ட விடுதியில், 2,000 மாணவியர் தங்கும் வகையில் கட்டப்படும். ஒவ்வொரு கட்டடத்திலும் 500 மாணவியர் தங்கலாம்.மஹாராணி கல்லுாரியின் ஒரு பகுதி இடிந்து விழ்ந்துள்ள நிலையில், அதன் முன்பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டடத்தின் ஒரு பகுதியை பாதுகாத்து, மற்ற இடத்தில் கட்டடம் கட்டப்படும். கல்வி மற்றும் சுகாதார துறையில் நால்வடி கிருஷ்ணராஜ உடையார் அளித்த திட்டங்கள் படி, வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us