ராமநாதபுரத்தில் ரூ.3 கோடியில் அறிவுசார் மையம்; விரைவில் திறப்பு விழா
ராமநாதபுரத்தில் ரூ.3 கோடியில் அறிவுசார் மையம்; விரைவில் திறப்பு விழா
UPDATED : அக் 24, 2023 12:00 AM
ADDED : அக் 24, 2023 08:52 PM
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் நகராட்சியில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ரோட்டில் ரூ.3 கோடியில் மத்திய அரசின் அறிவுசார் மையம் கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளது. விரைவில் முதல்வர் ஸ்டாலின் திறக்க உள்ளார்.ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியில் நவீன வாகன நிறுத்தும் வசதிகளுடன் ரூ.3 கோடியில் மத்திய அரசின் நிதியில் அறிவுசார் மையம் என்ற பெயரில் டிஜிட்டல் நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ராமநதாபுரம் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி முன்பு நிலம் தேர்வு செய்யப்பட்டு 2022 ஜன.,ல் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.இந்த அறிவுசார் மையத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் படிப்புகளுக்கான புத்தகங்கள், படிப்பகம், கார் பார்க்கிங் வசதியுடன் வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றுடன் பணிகள் நிறைவடைந்துள்ளது. ரூ.10 லட்சத்தில் புத்தகங்கள், தளவாட பொருட்கள் வாங்கப்பட உள்ளது.அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் மூலம் அறிவுசார் மையம் திறக்கப்பட உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் கூறினர்.
