நீட் எதிர்ப்பு பிரசாரம் தி.மு.க.,வின் ஏமாற்று வேலை: தினகரன்
நீட் எதிர்ப்பு பிரசாரம் தி.மு.க.,வின் ஏமாற்று வேலை: தினகரன்
UPDATED : அக் 25, 2023 12:00 AM
ADDED : அக் 25, 2023 08:20 AM
திருப்புத்துார்:
சிவகங்கை மாவட்டம் திருப்புத்துாரில் மருதுபாண்டியர் நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய பின் அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் நிருபர்களிடம் கூறுகையில், 'நட் தேர்வு எதிர்ப்பு என்பது காவிரி பிரச்னை, மீனவர் பிரச்னை போல தி.மு.க.,நடத்தும் ஏமாற்று வேலை' என்றார்.மேலும் அவர் கூறியதாவது:
மக்களை ஏமாற்றி இந்த ஆட்சி நடக்கிறது. தி.மு.க., எப்போதும் திருந்தாது என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஏற்கனவே 11 ஆண்டுகளால் வெறுக்கப்பட்ட நிலையில் அக்கட்சி திருந்தியிருக்கும் என்று ஓட்டளித்தனர்.இதற்கு மாற்று அ.ம.மு.க., என்பதை உணர்ந்து வருகிறார்கள். அடுத்த சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அ.ம.மு.க., ஏற்படுத்தும். காவிரிப்பிரச்னை, மீனவர் பிரச்னையில் கச்சத்தீவை முன்னாள் பிரதமர் இந்திராவிற்கு பயந்து இலங்கைக்கு தாரை வார்த்ததை போல தற்போது தி.மு.க.,வின் நீட் தேர்வு பிரசாரம் ஒரு ஏமாற்று வேலை தான். மக்கள் விரோத ஆட்சியாளருக்கு எதிராக அ.ம.மு.க., கூட்டணி அமைக்கும்.லோக்சபா தேர்தலில் தமிழர், பிரதமர் வேட்பாளராக சாத்தியமில்லை. அப்படி வந்தால் அ.ம.மு.க., ஆதரிக்கும், என்றார்.
