UPDATED : அக் 27, 2023 12:00 AM
ADDED : அக் 27, 2023 05:11 PM
காஞ்சிபுரம்:
தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டம், தாமஸ் இளங்கோவன் சங்க ஒருங்கிணைப்பாளர் தலைமையில் காஞ்சிபுரத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் பக்கிரி மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் 6,750 ரூபாய் வழங்க வேண்டும். அரசு துறை காலி பணியிடங்களில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை சேர்த்து முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.காலை சிற்றுண்டி திட்ட அமலாக்கத்தை, சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். பின், போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் 75 பேரை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
