நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல்: ஜனாதிபதியிடம் நேரில் முதல்வர் மனு
நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல்: ஜனாதிபதியிடம் நேரில் முதல்வர் மனு
UPDATED : அக் 27, 2023 12:00 AM
ADDED : அக் 27, 2023 05:15 PM
சென்னை:
சென்னை வந்துள்ள ஜனாதிபதி திரவுபதி முர்முவை , முதல்வர் ஸ்டாலின் சந்தித்து, நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என மனு வழங்கினார்.அந்த மனுவில் கூறியுள்ளதாவது:
நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு தாமதமின்றி ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள அதீத காலதாமதத்தால் தகுதி வாய்ந்த மாணவர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். காலதாமதம் காரணமாக அதிக கட்டணம் செலுத்தி பயிற்சி பெற முடியாமல் தகுதி வாய்ந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவ கல்வி சேர்க்கை தமிழகத்தில் நல்ல பலன் கொடுத்தது. மத்திய சுகாதாரத்துறை கேள்விகளுக்கு பதிலளித்தும் இதுவரை ஒப்புதல் அளிக்கப்படவில்லை. நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து தமிழக மாணவர்களின் நலனை காத்திட வேண்டும். உணர்வுப்பூர்வமான பிரச்னையில் தலையிட்டு ஒப்புதல் அளிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
