தனலட்சுமி சீனிவாசன் பல்கலை மாணவர் விடுதிகளுக்கு பூமி பூஜை
தனலட்சுமி சீனிவாசன் பல்கலை மாணவர் விடுதிகளுக்கு பூமி பூஜை
UPDATED : அக் 29, 2023 12:00 AM
ADDED : அக் 29, 2023 09:18 AM
சென்னை:
திருச்சி சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில், பல்வேறு நவீன வசதிகளுடன், மாணவர் தங்கும் விடுதிகள் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.தனலட்சுமி சீனிவாசன் பல்கலை வேந்தர் அ.சீனிவாசன், திருச்சி சமயபுரம், பெரம்பலுார் மற்றும் சிறுவாச்சூர் வளாகங்களில் கட்டப்பட உள்ள மாணவர் விடுதிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.மொத்தம், 20 லட்சம் சதுர அடியில், ஏழு விடுதிகள், சமயபுரம், பெரம்பலுார் மற்றும் சிறுவாச்சூர் ஆகிய இடங்களில் கட்டப்பட உள்ளன. இந்த மாணவர் விடுதிகளானது, நவீன சமையல் அறை, &'ஏசி&' அறைகள், உடற்பயிற்சி கூடம், ஏ.டி.எம்., வசதி, உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்கம், 24 மணி நேர மருத்துவ சேவை உள்ளிட்ட வசதிகளை உடையது. புதிய விடுதிகளில், 10,000 மாணவர்கள் தங்கலாம்.பூமி பூஜை நிகழ்ச்சியில், தனலட்சுமி சீனிவாசன் பல்கலை இணை வேந்தர் அனந்தலட்சுமி கதிரவன், தனலட்சுமி சீனிவாசன் குழும செயலர் நீலராஜ், சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் நீவாணி கதிரவன்,பல்கலை எப்.சி., நிர்மல் கதிரவன், அறக்கட்டளை உறுப்பினர் ராஜபூபதி, தனலட்சுமி சீனிவாசன் பல்கலை துணை வேந்தர் சி.கே.ரஞ்சன், பதிவாளர், கல்லுாரி முதல்வர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
