தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளி மாணவர்களுக்கு தென்னை சாகுபடி தொழில்நுட்பம் விளக்கம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு தென்னை சாகுபடி தொழில்நுட்பம் விளக்கம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு தென்னை சாகுபடி தொழில்நுட்பம் விளக்கம்


UPDATED : அக் 30, 2023 12:00 AM

ADDED : அக் 30, 2023 09:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2023 12:00 AM ADDED : அக் 30, 2023 09:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
உடுமலை அருகேயுள்ள, திருமூர்த்திநகர் மத்திய தென்னை வளர்ச்சி வாரியம், தென்னை மகத்துவ மையத்தில், ஜல்லிபட்டி, அரசு மேல்நிலைப்பள்ளியில், வேளாண் அறிவியல் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான, 10 நாள் தொழிற்கல்வி சார்ந்த நேரடி களப்பயிற்சி நடந்தது.இப்பயிற்சியின் போது, மாணவர்களுக்கு தென்னை உயர் சாகுபடி தொழில் நுட்பங்கள், தென்னை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி குறித்து நேரடி களப்பயிற்சி, பாட வழி பயிற்சி மற்றும் செய்முறை பயிற்சிகள், தொழில்நுட்ப வல்லுனர்களால் அளிக்கப்பட்டது.விவசாயிகளின் தோட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகளை நேரில் பார்வையிட்டு, மாணவர்கள் தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டனர். பயிற்சியின் நிறைவு விழா, தென்னை மகத்துவ மையத்தில் நடந்தது. பண்ணை மேலாளர் ரகோத்துமன் தலைமை வகித்தார்.மாணவர்களுக்கு வேளாண்மை துறையில் உள்ள பல்வேறு படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகளை பற்றி விரிவாக கூறினார். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி, மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.பயிற்சியாளர் ஹேமலதா, விவசாய ஆசிரியர் ரமேஷ் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். நிறைவு விழாவை முன்னிட்டு, தென்னையில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களுக்கான கண்காட்சி நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us