UPDATED : அக் 31, 2023 12:00 AM
ADDED : அக் 31, 2023 09:41 AM
அ நிறம் | அளவு
கரூர்:
தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர், கரூரில் கோரிக்கை அட்டை அணிந்து கொண்டு நேற்று முன்தினம், பணியில் ஈடுபட்டனர். அதில், இளநிலை உதவியாளர் பணியிடத்தில் இருந்து, ஆய்வக உதவியாளராக பணியிறக்கம் செய்வதை கைவிட வேண்டும்; பள்ளிகளில் அமைச்சு பணியாளர்களின் வேலை நேரத்தை, முன்பு இருந்தது போல மாற்றியமைக்க வேண்டும்; நேரடி நியமன உதவியாளர் முறையை, கல்வித்துறையில் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.கரூர் மாவட்டத்தில், கலெக்டர் அலுவலகம், மாவட்ட கல்வித்துறை அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், 250க்கும் மேற்பட்ட, கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
