தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 தேர்வு முறைகேட்டை சி.பி.சி.ஐ.டி., விசாரிக்கும்: உயர் நீதிமன்றம்

பிளஸ் 2 தேர்வு முறைகேட்டை சி.பி.சி.ஐ.டி., விசாரிக்கும்: உயர் நீதிமன்றம்

பிளஸ் 2 தேர்வு முறைகேட்டை சி.பி.சி.ஐ.டி., விசாரிக்கும்: உயர் நீதிமன்றம்


UPDATED : அக் 31, 2023 12:00 AM

ADDED : அக் 31, 2023 07:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2023 12:00 AM ADDED : அக் 31, 2023 07:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரையைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் தந்தை தாக்கல் செய்த மனுவில், கணிதம், இயற்பியல், வேதியியல் விடைத்தாள்களில் என் மகனின் கையெழுத்தில் வேறுபாடு உள்ளதாகக் கூறி, அவர் எழுதிய அனைத்து தேர்வுகளையும் ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கோரி, அரசு தேர்வுகள் துறை இயக்குனரக இணை இயக்குனர், எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.முறையாக விசாரிக்காமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.ஏற்கனவே அந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, இவ்வழக்கு முடிவுக்கு வரும்வரை மனுதாரர் மகனுக்கு எதிராக எவ்வித மேல்நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டார். இந்நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று விசாரித்தார். அரசு தரப்பில், தேர்வில் முறைகேடு நடந்துள்ளது விசாரணையில் உறுதியாகியுள்ளது என தெரிவித்தது.நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் மகன் நவ., 9ல் அரசு தேர்வுகள் துறை இணை இயக்குனரின் முன்னிலையில் ஆஜராக வேண்டும். அவர் முழுமையாக விசாரிக்க வேண்டும். அதன் அடிப்படையில் தேர்வில் பங்கேற்க தடை விதிக்கலாமா அல்லது தொடர்ந்து தேர்வில் பங்கேற்க அனுமதிக்கலாமா என்பது குறித்து ஒரு மாதத்தில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.தேர்வு முறைகேடு குறித்து அரசு தேர்வுகள் துறை இணை இயக்குனர் மதுரை நகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்க வேண்டும். போலீசார் வழக்கு பதிந்து சி.பி.சி.ஐ.டி.,  ஏ.டி.ஜி.பி.,க்கு அனுப்ப வேண்டும். சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விசாரித்து 6 மாதங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us