தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அமைச்சர் நடத்திய பேச்சு தோல்வி; போராட தயாராகும் பட்டதாரிகள்

அமைச்சர் நடத்திய பேச்சு தோல்வி; போராட தயாராகும் பட்டதாரிகள்

அமைச்சர் நடத்திய பேச்சு தோல்வி; போராட தயாராகும் பட்டதாரிகள்


UPDATED : நவ 01, 2023 12:00 AM

ADDED : நவ 01, 2023 11:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2023 12:00 AM ADDED : நவ 01, 2023 11:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
ஆசிரியர் பணி நியமனத்துக்கான போட்டி தேர்வை ரத்து செய்ய வலியுறுத்திய பட்டதாரிகளுடன் அமைச்சர் மகேஷ் நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது.தமிழக அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்ற டெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் பணி நியமனத்துக்கு புதிதாக போட்டி தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இதற்கு 2013ல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த பட்டதாரிகள் சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் கடந்த மாதம் தொடர் போராட்டம்நடத்தினர். பள்ளிக்கல்வி அமைச்சர் மற்றும் அரசு தரப்பில் பேச்சு நடத்தியதால் போராட்டம் முடிவுக்கு வந்தது.இந்நிலையில் 2222 பட்டதாரி ஆசிரியர்களின் காலியிடங்களை நிரப்ப ஜன.7ல் போட்டி தேர்வு நடத்தப்படும் என, பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. போட்டி தேர்வுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல பட்டதாரிகள் தயாராகினர்.இதையடுத்து சங்க நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் மற்றும் அதிகாரிகள், நேற்று பேச்சு நடத்தினர். இதில் போட்டி தேர்வை நடத்துவதுஅரசின் கொள்கை முடிவு; நீதிமன்ற உத்தரவின்படி, காலியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது என அமைச்சர் தரப்பில்தெரிவிக்கப்பட்டது.இதனால் பேச்சு தோல்வியடைந்து சங்க நிர்வாகிகள் அதிருப்தியுடன் வெளியேறினர். மீண்டும் போராட்டம் நடத்துவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என, அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us