86 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரப்ப மத்திய அரசு அனுமதி
86 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரப்ப மத்திய அரசு அனுமதி
UPDATED : நவ 01, 2023 12:00 AM
ADDED : நவ 01, 2023 12:07 PM
நாடு முழுதும் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிகளில், 15 சதவீத எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு செல்கின்றன. அரசு கல்லுாரிகளில் மீதமுள்ள, 85 சதவீத இடங்கள் மற்றும் சுய நிதி கல்லுாரிகளுக்கான இடங்களை நிரப்ப மாநில அரசு கவுன்சிலிங் நடத்தி வருகிறது.இதன்படி, நான்கு சுற்று கவுன்சிலிங் நிறைவடைந்தும், தமிழகத்தில், 69 உட்பட நாடு முழுதும், 156 எம்.பி.பி.எஸ்., இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாமல் உள்ளன. அதேபோல, மாநில ஒதுக்கீட்டில், 17 எம்.பி.பி.எஸ்., இடங்களும் நிரம்பவில்லை. அதாவது, தமிழகத்தில், 86 இடங்கள் காலியாக இருந்தன.அதனால், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை தேதியை நீட்டிக்க வேண்டும் என, தேசிய மருத்துவ ஆணையத்திடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இதையடுத்து, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும், https://mcc.nic.in/ug-medical-counselling என்ற இணையதளத்தில், அகில இந்திய கவுன்சிலிங் துவங்கியுள்ளது. இதில், தமிழகத்தில் காலியாக உள்ள, 69 இடங்கள் உட்பட 156 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நவ., 7ம் தேதி வரை நடக்க உள்ளது.
